ஒரே பாலின திருமணத்தை சட்டப் பூர்வமாக்கும் முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெறும் வாய்ப்புள்ளது.
தைவானில் தாராள மற்றும் முற்போக்கு கொள்கை உடைய ‘ஜனநாயக முற்போக்கு கட்சி (டிபிபி)’ ஆட்சிக்கு வந்தது முதல், ஒரே பாலின திருமணத்தை அரசு சட்டப்பூர்வமாக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இக்கட்சி சார்பில் தைவானின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் கடந்த மே மாதம் பதவியேற்றார். இவர், பாலின சமத்துவம் மற்றும் எல்.ஜி.பி.டி. உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஆவார்.
கடந்த 2012-ல் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை ஜனநாயக முற் போக்கு கட்சி சார்பில் யு மெய்-நு என்ற பெண் எம்.பி. பரிந்துரை செய்தார். ஆனால் இதை நாடாளு மன்ற குழு ஏற்கவில்லை. இந்நிலை யில் சாய் இங்-வென் இந்த மசோதாவை மீண்டும் பரிந் துரை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அதிபர் சாய் இங்-வென் தலைமையிலான ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பிரபல மதுபானக் கூடத்தின் உரிமையாளர் சாங் (45) கூறும் போது, “தைவானில் ஒரே பாலின திருமணம் விரைவில் சட்டப்பூர்வ மாக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்றார்.