உலகம்

கிர்கிஸ்தான் நாட்டில் விமான விபத்தில் 37 பேர் பலி

ஏஎஃப்பி

கிர்கிஸ்தான் நாட்டின் மனாஸ் விமான நிலையத்தில் சரக்கு விமானம் நேற்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளா னது. இதில் 37 பேர் பலியாகினர்.

துருக்கி நாட்டின் மை கார்கோ நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு விமானம் நேற்று ஹாங்காங்கில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்பட்டது. இந்த விமானம் வழியில் கிர்கிஸ்தான் நாட்டின் மனாஸ் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி அந்த நாட்டு நேரப் படி காலை 7.31 மணிக்கு மனாஸ் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்க முயன்றது. ஆனால் கடும் பனிமூட்டம் காரண மாக ஓடுபாதைக்கு பதிலாக குடி யிருப்பு பகுதியில் விமானம் தரை யிறங்கி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த 4 விமானிகள் உயிரிழந்தனர். விமானம் தரையிறங்கிய மனாஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 33 பேர் பலியாகினர். ஒட்டுமொத்த மாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக் கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முதல்கட்ட விசாரணையில் விமானியின் தவறால் விபத்து நேரிட்டிருப்பது தெரியவந்துள் ளது. விமானம் குடியிருப்பு பகுதிக்குள் தரையிறங்கியதால் சுமார் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT