ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தார் என டொனால்டு டிரம்ப் நம்புவதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குடியுரிமை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை டிரம்பின் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், "ஒபாமாவின் பிறப்பு சன்றிதழையை கண்டறிந்து விட்டதாகவும். ஒபாமா அமெரிக்காவில் பிறந்தார் என டிரம்ப் நம்புகிறார்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து டொனால்டு டிரம்ப் எந்தவித நேரடி பதிலும் இதுவரை அளிக்கவில்லை.