உலகம்

ஈகுவடாரில் நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

ஈகுவடார் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் கடந்த ஏப்ரலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து 2100-க்கும் மேற்பட்ட தடவை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஈகுவடாரின் எஸ்மெர்டால்ஸ் நகரை மையமாகக் கொண்டு நேற்று 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 5.9 ஆகப் பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 64 ஆக பதிவானது. எனினும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் ஈகுவடார் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT