தெற்கு சூடானில், நைல் நதியை கடக்க முயன்ற 200 பேர் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் பலியாகினர். இத்தகவலை அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிலிப் ஆகர் உறுதி செய்துள்ளார்.
தெற்கு சூடானில், அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆளும் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போராட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இது வரை லட்சக் கணக்கானோர் வெளியேறிவிட்டனர். அமைதியை ஏற்படுத்த ஐ.நா குழுவினரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
தொடரும் கலவரங்களில் இருந்து தப்பிக்க நினைத்த குழந்தைகள், பெண்கள் அடங்கிய 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு படகில் ஏறி நைல் நதி வழியாக தப்பிக்க முயன்றனர். அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததில் அனைவருமே மூழ்கிவிட்டதாக ராணுவத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.