உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் மத சுதந்திரத்தை காப்பாற்ற எனது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறைகூவல் விடுத்தார். ஜனவரி 16ம் தேதியை அமெரிக் காவில் மத சுதந்திர நாளாக அறிவித்து அதிபர் பாரக் ஒபாமா பேசியதாவது:
கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், கடவுளை மறுப்பவர்கள், கடவுள் உண்டு என்பதை கண்டறிய முடியாது என்று கூறுவோர் என அனைவரையும் நாம் கொண்டுள்ளோம். மாறுபட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் கொண்ட பல்வேறு நாடுகளின் மக்களை கொண்ட நாடு என்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு நாடும் மத சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றார் ஒபாமா.