உலகம்

புதிதாக பிறந்த கிரகம் கண்டுபிடிப்பு: இளம் நட்சத்திரத்துடன் சுற்றுகிறது

ஐஏஎன்எஸ்

அண்டவெளியில் நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இளம் நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிதாக பிறந்த கிரகம் ஒன்றை அமெரிக்கா வின் நாசா வானியல் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கிரகத்துக்கு கே2-33பி என பெயரிடப்பட்டு ள்ளது. சூரிய குடும்பத்தின் கிரகமான நெப்டியூனை விட, சற்று பெரிதாக உள்ள இந்த கிரகம் அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாக சுற்றி வருகிறது. அதாவது 5 நாளில் நட்சத்திரத்தை அந்த கிரகம் சுற்றி வந்துவிடுகிறது.

நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தை ஆராய்ந்ததில், அது உருவாகி 10 மில்லியன் ஆண்டு கள் ஆகியிருக்கலாம் என கணக் கிடப்பட்டுள்ளது. பூமியின் வயதை (சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள்) கணக்கிட்டால், இந்த கிரகம் புதிதாக பிறந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் மத்திய அல்லது மிக பழமையான வயதை கொண்டவையாகும்.

இது குறித்து கலிபோர்னியா தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத் தின் எரிக் பெட்டிகுரா கூறும் போது, ‘‘புதிதாக பிறந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், ஒரு கிரகம் எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதை வைத்து பூமியின் உருவாக் கத்தையும், அதன் பரிணாம வளர்ச் சிகளையும் அறிந்து கொள்ளலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT