உலகம்

மோடியுடன் பேசுகிறார் ட்ரம்ப்

பிடிஐ

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், ''அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார். இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் அதிபர் ட்ரம்ப் உரையாட இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது, தொலைபேசி வாயிலாக ட்ரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுள் மோடியும் ஒருவர்.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப், இந்தியா- அமெரிக்க நாடுகளின் நட்புறவு எனது ஆட்சிக் காலத்தில் மேலும் நெருக்கமாக இருக்கப் போகிறது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி, சிறப்பான எதிர்காலத்தைப் பெற போகிறோம்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT