சீனாவின் பிரபல 'வீ சாட்' (WeChat) எனும் சமூக ஊடக செயலியை ரஷ்யா தடை செய்துள்ளது.
'வீ சாட்' தடை செய்யப்பட்டது குறித்து சீன பத்திரிகை வெளியிட்ட செய்தியில், "ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு குழு சீனாவின் 'வீ சாட்' எனும் சமூக ஊடக செயலியை தடை செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவின் இணையதள நிறுவனமான டென்செண்ட் கூறும்போது, "ரஷ்யாவில் 'வீ சாட்' செயலி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப் பிரபல சமூக ஊடக செயலியான 'வீ சாட்' 2011- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனாவைப் பொறுத்தவரை ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் சீன அரசால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.