உலகம்

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த அதிபர் வேட்பாளர் ஹிலாரி

செய்திப்பிரிவு

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மயங்கி சரிந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடங் கள் கடந்த 2001-ம் ஆண்டு செப் டம்பர் 11-ம் தேதி தீவிரவாதிகளால் விமானங்கள் கொண்டு தகர்க்கப் பட்டன. இந்தச் சம்பவத்தின் 16-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. நியூயார்க்கில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் ஹிலாரி பங்கேற்றார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறைவு செய்தார். அவரது பாது காவலர்கள் அவரைப் கைத்தாங் கலாக அழைத்துச் சென்றனர். காரில் ஏறும்போது அவர் மயங்கி சரிந்தார். அவரைப் பாதுகாவலர்கள் தூக்கி காரில் படுக்க வைத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் வேட்பாள ரின் உடல்நலம் குறித்து அந்த நாட்டு மக்கள் மிகுந்த அக்கறை கொள்கின்றனர். அந்த வகையில் ஹிலாரியின் உடல்நலக்குறைவு அமெரிக்காவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

இதுகுறித்து ஹிலாரியின் மருத்துவர் லிசா பார்டாக் கூறும் போது, “ஹிலாரிக்கு ஒவ்வாமை காரணமாக சளித்தொல்லை இருந்து வந்தது. கடந்த வெள்ளிக் கிழமை அவரைப் பரிசோதித்த போது, அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. ஹிலாரி தற்போது குணமடைந்து வருகிறார்” என்றார்.

தேர்தல் நிதி திரட்டுதல் மற்றும் பிரச்சாரத்துக்காக 2 நாள் பயணமாக ஹிலாரி திங்கள் கிழமை காலை கலிபோர்னியா செல்லவிருந்தார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.

SCROLL FOR NEXT