தூய்மை இந்தியா திட்டத்தைப் போன்றே, நகரத்தின் தூய்மையை வலியுறுத்தி, நியூயார்க் நகரில் ஒரு திட்டத்தை பாஜக ஆரம்பித்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்து தூய்மை இந்தியா திட்டம் குறித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பாஜக தலைவர் விஜய், நியூயார்க்கில், நகரை தூய்மைப் படுத்தும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்தத் திட்டம் தூய்மை இந்தியா திட்டைத்தப் போலவே செயல்படுத்தப்படுகிறது. பாஜக ஆர்வலர்கள் மான்ஹாட்டனில் உள்ள 52-வது தெரு, 2 மற்றும் 3-வது அவென்யூ ஆகியவற்றை சுத்தம் செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளரான விஜய் கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் என்ன செய்கிறார்களோ, அதைப் போலவே அமெரிக்காவிலும் தூய்மை பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி இங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்" என்றார்.