ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு பிராந்தியம் மற்றும் துபாய்க்கான இந்திய துணைத் தூதராக அனுராக் பூஷன் ஞாயிற்றுக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.
இதுவரை டெல்லியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவல கத்தின் உயர் அதிகாரியாக இருந்த அனுராக், கடந்த 1995-ம் ஆண்டு ஐ.எப்.எஸ். பணியில் சேர்ந்தார். வெளியுறவு அதிகாரி என்ற வகையில் டோக்கியோ, டாக்கா, பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள வெளியுறவு சேவை பயிற்சி மையத்தில் அனுராக் பணியாற்றியபோது, இந்திய மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் பயின்ற அனுராக், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி மையத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை (செயலாட்சி நிர்வாகம்) முடித்தார்.
14-வது அதிகாரி
கடந்த 1973-ம் ஆண்டிலிருந்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் 14-வது அதிகாரியாக அனுராக் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை இந்தப் பதவியில் இருந்த சஞ்சய் வர்மா எத்தியோப்பியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.