மேற்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவில் மக்கள் நெரிசல் மிகுந்த சூப்பர் மார்க்கெட் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 52 பேர் இறந்தனர்.
இதுகுறித்து லாட்வியா காவல் துறை செய்தித் தொடர்பாளர் சிகிதா பில்தவா கூறியதாவது:
தலைநகர் ரிகாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வியாழக்கிழமை மாலை பொதுமக்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
கட்டிடத்தின் இதர பகுதியும் இடிந்து விழ வாய்ப்பு இருப்பதால், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். மிக மோசமான இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.
கட்டிடம் இடிந்ததற்கு கட்டுமான நடைமுறையில் ஏற்பட்ட கோளாறு அல்லது கட்டிட கூரையின் மீது நடைபெற்ற பணியே காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கட்டிடத்தின் மேற்கூரை மீது, தோட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.