உலகம்

அதிபர் தேர்தலில் போட்டியிட பாபி ஜிண்டால் முயற்சி

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநர் பாபி ஜிண்டால், 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்க முயற்சி செய்து வருவதாக மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்கரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டேவிட் விட்டர் கூறுகையில், “குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் தலைமைத்துவப் பண்பின் மீதும், அரசியல் மதிப்பீடுகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்றார்.

ஆளுநர் பாபி ஜிண்டாலின் பதவிக் காலம் 2015-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அடுத்த லூசியானா மாகாண ஆளுநர் தேர்தலில் டேவிட் விட்டர் போட்டியிட முயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT