எகிப்தின் மின்யா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து எகிப்து ஊடகங்கள், "எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மின்யா மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி பேருந்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தில் வாழும் 10% கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அங்குள்ள தீவிரவாதக் குழுக்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் எகிப்தில் கிறிஸ்தவ பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.