உலகம்

இந்திய சுற்றுப் பயணம் குறித்து நேபாள பிரதமர் முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

நேபாள பிரதமர் பிரசண்டா நாளை இந்தியா வருகிறார். இதையொட்டி நேற்று அவர் நேபா ளத்தின் முன்னாள் பிரதமர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நேபாள அரசமைப்பு சட்டம் தொடர்பாக அந்த நாட்டில் பல் வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள் ளன. அரசமைப்பு சட்டத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி மாதேசி இன மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக நேபாள தலைவர்கள் குற்றம் சாட்டி வரு கின்றனர்.

நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்தே கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. மாதேசி போராட்டங்களால் இருநாடுகளுக் கும் இடையே சரக்கு போக் குவரத்து தடைபட்டது. இதைத் தொடர்ந்து நேபாளத்துக்கு சீனா ஆதரவு கரம் நீட்டியது.

இந்தப் பின்னணியில் நேபாள பிரதமர் பிரசண்டா 4 நாட் கள் பய ணமாக நாளை டெல்லி வருகிறார். அப்போது இந்தியாவு டனான உறவை மேம்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள்

இந்த விவகாரம் தொடர்பாக நேபாள முன்னாள் பிரதமர்கள் மாதவ் குமார், லோகேந்திர பகதூர் சந்த், பாபுராம் பட்டாராய், ஷேர் பகதூர் தேவுபா ஆகியோருடன் தலைநகர் காத்மாண்டுவில் பிரசண்டா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கடந்த காலத்தில் இந்தியா, நேபாளம் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.

SCROLL FOR NEXT