தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் அளித்த விவகாரம் தொடர்பாக சாம்சங் நிறுவன தலைவர் லீ ஜே யாங்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
ஊழல் விவகாரம் தொடர்பாக தென்கொரிய அதிபர் பார்க் கு வென் ஹை 6 மாதங்களுக்கு தற் காலிக பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளார். அவர் அதிபராக நீடிப் பதா, கூடாதா என்பது குறித்து அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மொத்தம் 9 நீதிபதிகள் அடங்கிய அந்த நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் பார்க் குவென் ஹை மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து தீர்ப்பளித்தால் அவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார். இல்லையெனில் அவர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
கடந்த 2015 ஜூலையில் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் சி அண்ட் டி நிறுவனத்துடன் செயில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒன்றிணைக்கப்பட்டது.
இந்த வர்த்தக நடவடிக்கைக்கு சாதகமாக செயல்பட அதிபர் பார்க் குவைன் ஹைக்கு நன்கொடை என்ற பெயரில் பெருந்தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாம்சங் நிறுவன தலைவர் லீ ஜே யாங்கிடம் அந்த நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சியோலில் நேற்று விசாரணை நடத்தினர்.