உலகம்

காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்: ஐ.நா.பொதுச் செயாலளர் பான் கி-மூன் நம்பிக்கை

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் 17 வீரர்கள் பலியாகினர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதுகுறித்து பான் கி-மூன் செய்தித் தொடர்பாளர் வெளி யிட்ட அறிக்கை:

காஷ்மீரில் நடந்து வரும் நிகழ்வுகளை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. அப்பகுதி யில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக் கத்தக்கது.

இதில் பலியான வீரர்க ளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரை வில் குணமடையவும் பிரார்த்திக் கிறேன். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத் தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

காஷ்மீர் பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் அங்கு அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் பொறுப் புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களும் காஷ்மீர் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீனா கருத்து

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறும்போது, “காஷ்மீர் தாக்குதலில் பலியான, காய மடைந்த வீரர்களின் குடும்பத்தின ருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எந்த வடிவில் இருந்தாலும் தீவிரவாதத்தை சீனா எதிர்க்கிறது. காஷ்மீரில் வன்முறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் கருத்து

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் (வெளி யுறவு விவகாரம்) சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ் தான்தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதுபோன்ற அவதூறு கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றது” என்றார்.

SCROLL FOR NEXT