உலகம்

அமெரிக்காவின் அதிகாரமிக்க நாடாளுமன்ற குழு பதவிகளில் 5 இந்தியர்கள்

பிடிஐ

அரசியல் வரலாற்றில் முதல் முறை

அமெரிக்க அரசியல் வரலாற்றி லேயே முதல் முறையாக 5 இந்திய வம்சாவளி அமெரிக்க எம்பிக் களும் அதிகாரமிக்க நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் மற்றும் எம்பிக்கள் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் 5 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் 5 பேருக்கும் முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரமிக்க குழுவில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிலிகான் வேலியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோ கண்ணாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வலிமைமிக்க பட்ஜெட் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சீயாட்டில் இருந்து பிரதிநிதிகள் சபை எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமீளா ஜெயபால் நீதித்துறை குழுவின் உறுப்பினராக நியமிக் கப்பட்டுள்ளார்.

சிகாகோ மேற்கு மற்றும் வட மேற்கு புறநகர் தொகுதி எம்பியான ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு கல்வி மற்றும் பணி ஆற்றல் குழுவின் உறுப்பினர் பதவியும், குடியரசு கட்சியின் கொள்கை முடிவு குழு வின் பதவியும் வழங்கப்பட் டுள்ளது.

3 முறை எம்பியாக தேர்வான வரும், இந்திய வம்சாவளி அமெரிக்க எம்பிக்களில் மிகவும் மூத்தவருமான அமி பெரா வெளியுறவு விவகாரங்கள் குழு, அறிவியல், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தலைமை தாங்கும் பொறுப்பும் பெராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ், அதிகாரமிக்க செனட் குழுக்களின் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பட்ஜெட், உளவுதுறையின் தேர்வு குழு, சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை, அரசு விவகாரங்கள் மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு சார்ந்த குழுவின் உறுப்பினராக அவர் நீடிப்பார்.

இது குறித்து ஹாரிஸ் வெளி யிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்க எதிர்காலத்தை தீர்மானிப்பது இந்த நான்கு குழுக்கள் தான். அமெரிக்கர்களின் எதிர்காலம் தொடர்பாக கவலை எழுந்துள்ள நிலையில், நான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே அமெரிக்க குடும்பங்களின் நலனுக் காக நான் நிச்சயம் கடுமையாக பணியாற்றுவேன்’’ என குறிப்பிட் டுள்ளார்.

இது தவிர வழக்கமான குழுக் களிலும் இந்தியர்கள் இடம்பெற் றுள்ளனர். குறிப்பாக ஜெயபால் குடியரசுக் கட்சியின் மூத்த கொறடாவாக நாடாளுமன்றத்தில் செயல்படவுள்ளார். மேலும் குடியரசுக் கட்சி எம்பிக்களுக்கு துணைத் தலைவராகவும் பதவி வகிப்பார்.

SCROLL FOR NEXT