உலகம்

நரேந்திர மோடி அமெரிக்காவின் நண்பர்: வெள்ளை மாளிகை கருத்து

செய்திப்பிரிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் மிகச் சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எரிக், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதா வது: இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளோம். அதிபர் ஒபாமாவை பொறுத்தவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் மிகச் சிறந்த நண்பராகப் பாவிக்கிறார்.

கடந்த டிசம்பரில் பாரீஸில் நடந்த பருவநிலை மாறுபாடு மாநாட்டில் அமெரிக்க அரசுடன் இணைந்து பிரதமர் மோடி செயல்பட்டார். அதற்காக பெருமைப்படுகிறோம். அதுமட்டுமன்றி பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவுடனான நட்புறவை பெரிதும் மதிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT