உலகம்

சிந்து நதி ஒப்பந்தம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

கடந்த 1960-ல் முன்னாள் பிரதமர் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் முன்னிலையில் கராச்சியில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் ஆண்டுதோறும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் காஷ்மீரின் செனாப் நதியில் நீர் மின் நிலைய திட்டப் பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ்வரும் செனாப் நதியில் நீர் மின் நிலையம் அமைக்க பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.

இந்தப் பின்னணியில் சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இரு நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கி யது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் சிந்து நதிநீர் ஆணையர் பி.கே.சக்சேனாவும் பாகிஸ்தான் தரப்பில் மிர்சா ஆசிப் பெய்க்கும் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT