உலகம்

தேவயானி மீதான வழக்குகளை கைவிடக் கோரி மனு

செய்திப்பிரிவு

தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அலுவலகத்திற்கு இணையம் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுவில் கடந்த 12-ஆம் தேதியன்று இந்தியப் பெண் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் வைத்து கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர் சோதனை செய்யப்பட்ட முறையும் கண்டனத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற சம்பவங்கள் இந்திய-அமெரிக்க உறவை பாதிக்கும் எனவும் கைது நடவடிக்கையால் ஏற்கெனவே தேவயானி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT