சிரியா உள்நாட்டு போர் தொடர்பாக வரும் 25-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சபை திட்டமிட்டுள்ளது.
ஆனால் மிகக் குறைவான கால அவகாசம் மட்டுமே உள்ளதால் திட்ட மிட்டபடி அமைதிப் பேச்சை தொடங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியபோது, அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைக்க அவகாசம் தேவை. எனவே பேச்சுவார்த்தை தேதி தள்ளிப்போகலாம் என்று தெரிவித்தன.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் விடாலி செர்கின் கூறியபோது, ஏற்கெனவே திட்ட மிட்டபடி வரும் 25-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.