உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவின் சினா பங்க் எரிமலைச் சீற்றம் அதிகரித்துள் ளதைத் தொடர்ந்து அதன் அருகிலுள்ள இடங்களில் வசித்த 19 ஆயிரம்பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

சுமத்ரா தீவில் உள்ள சினாபங்க் எரிமலை கடந்த திங்கள்கிழமை இரவிலிருந்து 7 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு தீப்பிழம்புகளை வெளிப்படுத்தி வருகிறது. அப் பகுதியில் உள்ள காற்று மண்டலம் முழுவதும் சாம்பல் படர்ந்து காணப்பட்டது. இந்த எரிமலை கடந்த பல மாதங்களாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகத் துறையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ நுக்ரோஹா கூறுகையில், “எரிமலையிலிருந்து 5 கி.மீ. தூரத் துக்குள் வசிக்கும் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுத் துள்ளோம். கடந்த திங்கள்கிழமை இரவு மட்டும் 19 ஆயிரத்து 126 பேர் அங்கிருந்து வெளியேற் றப்பட்டு முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். அபாயத்துக்குரிய பகுதிக்குள் யாரையும் நுழைய விடாமல் தடுக்க ராணுவ வீரர்கள், போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT