உலகம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு பேச்சால் அமெரிக்க உதவியை நாடும் பலுசிஸ்தான் தலைவர்கள்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு பேச்சால் ஊக்கம் பெற் றுள்ள பலுசிஸ்தான் தலைவர்கள், தன்னாட்சி பலுசிஸ்தான் விவ காரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக தலை யிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பி னார். அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.

பலுசிஸ்தானில் பலூச் தேசிய இயக்கம் என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிட மிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். மோடி யின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பலூச் தேசிய இயக்க தலைவர் காலி பலூச் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத தீவிரவாதத்தை ஒரு கருவி யாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான பின்விளைவு களை பாகிஸ்தான் அனுபவிக்க நேரிடும்.

கடந்த 68 ஆண்டு களில் 5 முறை நடைபெற்ற பலுசிஸ்தான் விடுதலைப்போரில் பாகிஸ்தான் ராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பாளியாக்குவதற்கு மோடி யுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணையும் என நம்புகிறோம்.

ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் நடைபெறும் இனப் படு கொலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் கொள்கை கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியப் பிரதமர் மோடியின் பலுசிஸ்தான் தொடர்பான அறிக்கை சாதக மான மேம்பாடாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பலூச் குடியரசுக் கட்சித் தலைவர் பிரஹும்தக் புக்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலூச் நாட்டுக்கு ஆதரவாக மட்டும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் ஒட்டுமொத்த இந்திய தேசமும் தங்கள் குரலை உயர்த்தவில்லை. அது பலுசிஸ்தான் சுதந்திர போராட்டத்துக்கும் உதவும் முயற்சியும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.

பலூச் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் புக்டி, பாகிஸ் தான் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டார். இவரின் பேரன் தான் பிரஹும்தக் புக்டி ஆவார். காஷ்மீரில் நடைபெறும் அழிவுச் செயல்கள், மும்பை, பதான் கோட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு இருப்பது வெளிப்படையான ஒன்று என புக்டி தெரிவித்துள்ளார்.

மேலும், 1970களில் வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் அடக்குமுறையை கையாண்ட போது இந்தியா எடுத்த முடிவை பலுசிஸ்தான் இயக்கம் நினை வில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT