சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்ய விமானப்படையின் உதவியுடன் கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமான அலெப்போ நகரை அதிபர் ஆசாத் அண்மையில் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து சிரியாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பின.
ரஷ்யா, ஈரான், துருக்கி நாடுகளின் ஏற்பாட்டில் அதிபர் ஆசாத் தரப்புக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சிரியாவுக்கு மீண்டும் போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அனுப்ப ரஷ்யா முடிவு செய்திருப்பதாக ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.