ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில், போராட்டக் காரர்கள் மீது வன்முறை நிகழ்த்திய பீஜிங் ஆதரவாளர்கள் சிலரை ஹாங் காங் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் எட்டு பேர் ஹாங்காங்கில் உள்ள வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் காரணம் காட்டி அரசுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையைப் போராட்டக் காரர்கள் ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் 19 பேரைக் கைது செய்திருப்பதாக ஹாங்காங் போலீஸ் தெரிவித்துள்ளது.