ஏமன் நாட்டில் ராணுவ பயிற்சி முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகினர். 50-க் கும் மேற்பட்டோர் பலத்த காய மடைந்தனர்.
ஏமனில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் தலைநகர் சனா உட்பட பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி துறைமுக நகரான ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக சவுதி அரேபிய ராணுவம் தாக்குதலும் நடத்தி வருகிறது.
தற்போது அரசுப் படையின் பலத்தை அதிகரிக்க ஏராளமான இளைஞர்கள் படையில் சேர்க் கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஏடன் நகரில் உள்ள ராணுவ முகாம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உடற்தகுதித் தேர் வுக்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு வெடிகுண்டு கள் நிரப்பிய காரில் வந்த தற் கொலைப்படை தீவிரவாதி வெடித் துச் சிதறினான்.இதில் 60 பேர் உயி ரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 2015 மார்ச் மாதம் முதல் ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 6600 பேர் உயிரிழந்துள் ளனர்.