ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்காவிட்டால் மற்றொரு வடகொரியாவாக உருவெடுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, “முன்னாள் அதிபர் ஒபாமா பதவிக் காலத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அணுகுமுறையைப் போன்றதுதான் இது. இதனால் அணுசக்தி நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற அந்த நாட்டின் இலக்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்கா விட்டால் மற்றொரு வடகொரியாவாக அது உருவெடுக்கும். எனவே, ஈரானுடனான கொள்கை மறு ஆய்வு செய்யப்படும்” என்றார்.