அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வியட்நாம் நாட்டின் மேகாங் டெல்டா பகுதியில் நேற்று பயணம் மேற்கொண்டார். அப்போது 50 ஆண்டுகளுக்கு முன், தான் வியட்நாமில் அமெரிக்க போர் வீரனாக கம்யூனிஸ்ட் கெரில்லா படையினரைத் தேடி பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
அமெரிக்க கடற்படை அதிகாரி யாக பணியாற்றியவரான ஜான் கெர்ரி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் போரில் பங்கேற்றவர். 1968, 1969ம் ஆண்டுகளில் இவர் வியட்நாமில் கம்யூனிஸ்ட் கெரில்லா படையின ருக்கு எதிரான அமெரிக்க படை யில் இடம்பெற்றவர். இந்நிலையில் தற்போது வியட்நாம் சென்றுள்ள ஜான் கெர்ரி, நேற்று மேகாங் டெல்டா பகுதியில் காய் நுவாக் நதியில் படகுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்த நதியில் தான் பலமுறை பயணம் செய்திருப்பதாக தனது வழிகாட்டியிடம் கூறினார். வியட்நாம் போரில் பங்கேற்ற பிறகு தற்போதைய முதல் பயணம் குறித்து ஜான் கெர்ரி மிகவும் நெகிழ்ச்சியடைந்தார்.
படகில் கேப்டனுக்கு அருகில் நின்றுகொண்டு கெர்ரி பழைய சம்பவங்களை அசை போட்டார். அப்போது எதிரே வந்த படகில் இருந்த குடும்பத்துடன் வாழ்த்து பரிமாறிக்கொண்ட கெர்ரி, அவர்கள் படகில் இருந்த ஒரு நாயை கவனித்தார். பிறகு “என்னிடமும் ஒரு நாய் இருந்தது. அதற்கு வி.சி. என்று பெயர். வி.சி. என்றால் வியட்நாம் காங்கிரஸ் என்பதன் சுருக்கம். வியட்நாமில், தெற்கு வியட்நாமியர்கள் மற்றும் அமெரிக்க கூட்டணிப் படையினரை வீரமுடன் எதிர்த்துப் போரிட்ட வியட்நாம் காங்கிரஸ் கெரில்லா படையின் நினைவாக இப்பெயரை சூட்டினேன்” என்றார் கெர்ரி.
இடையில் ஒரு கிராமத்தில் படகை நிறுத்தச் சொன்ன கெர்ரி, அங்குள்ள கடையில் இனிப்பு வாங்கி குழந்தைகளுக்கு வழங்கி னார். கெர்ரி தனது பயணத்தில் முன்னாள் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் மத்தியில் உரையாற்றினார். முத லில் வியட்நாமிஸ் மொழியில் சில வார்த்தைகள் பேசி அவர்களை கவர்ந்த கெர்ரி, பிறகு ஆங்கி லத்தில், பூமி வெப்பமடை வதால் ஏற்பட்டுள்ள பருவகால மாற்றத்தை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“50 ஆண்டுகளுக்கு முன்னால் நமது வரலாற்றின் ஒரு கடுமை யான காலத்தில் நான் இங்கு இருந்தேன். இப்போது ஒரு நண்பனாக வந்துள்ளேன். எனது இந்தப் பயணம் இரு நாடுகளும் கொண்டுள்ள நெருங்கிய நட்புற வுக்கு சான்று” என்றார் கெர்ரி.