உலகம்

அமெரிக்காவில் 20 கோடி பேரின் ரகசிய தகவல் கசிவு

பிடிஐ

அமெரிக்காவில் சுமார் 20 கோடி பேரின் ரகசிய தகவல் கசிந்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசு கட்சியின் ஒரு அங்க மான குடியரசு தேசியக் குழுவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட டீப் ரூட் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தத் தகவல் கசிந்துள்ளதாக செய்தி இணையதளமான கிஸ்மோடோ தெரிவித்துள்ளது.

பல்வேறு ஆதாரங்கள் மூலம் திரட்டப்பட்ட அந்தத் தரவுகள் 1.1 டெராபைட்ஸ் அளவு கொண்டது என்றும், அதில் 20 கோடி பேர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல் மட்டுமின்றி, அவர்களின் மதச்சார்பு, இனம் பற்றிய விவரம், துப்பாக்கி கட்டுப் பாடு, கருக்கலைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினையில் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு உள்ளிட்ட விவரங்களும் கசிந்துள்ள தகவல்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT