வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் கோரிக்கையை சிந்து உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பர்வேஸ் முஷாரப் மீது பேநசீர் புட்டோ கொலை வழக்கு, பலு சிஸ்தான் தேசியவாதத் தலைவர் அக்பர் பக்டி கொலை வழக்கு, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து கைது செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்குகளில் அவரை போலீஸார் கைது செய்தனர். இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை நடந்து வருவதால், அவர் வெளிநாடுக ளுக்குச் செல்வதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. வெளிநாடுக ளுக்குச் செல்வோரை கட்டுப்படுத்து வது தொடர்பாக உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள பட் டியலில் முஷாரபின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் இருக்கும் 95 வயது தாயாரை பார்ப்பதற்காக முஷாரபுக்கு அனுமதி அளிக்க வேண்டும். என்று சிந்து உயர் நீதிமன்றத்தில் முஷாரபின் வழக் கறிஞர் மனு தாக்கல் செய்தி ருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடை பெற்றது. அவர் மீது வழக்குகள் உள்ளதால் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இதையடுத்து முஷாரப் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.