உலகம்

கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தாக்கும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை அமெரிக்க ராணுவம் உருவாக்கி உள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்கள், உளவு விமானங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. அவை பல நேரங்களில் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப் படுகின்றன.

எனவே எதிரிகளைத் திணற டிக்க கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தாக்கும் சிறிய ரக ஆளில்லா போர் விமானங் களை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது. இதற்கு ஸ்வார்ம் என்று பெயரிடப்பட்டுள் ளது. அண்மை யில் 103 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் கூறியதாவது:

ஸ்வார்ம் ரக ஆளில்லா விமானங்களைக் கடந்த அக் டோபரில் சோதனை செய்தோம். ஒரே நேரத்தில் 103 ஆளில்லா விமானங்களை ஒரு வீரர் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்கினார். இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் 16 செ.மீ. நீளம் உடையவை.

ஒருவேளை ஏதாவது ஓர் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டால்கூட மற்ற விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். இந்த கூட்டத்தில் புதிய ஆளில்லா விமானங்களையும் எளிதில் சேர்த்துக் கொள்ள முடியும்.

போர்முனையில் இதுபோன்ற ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வீரர்கள் உயிரிழப்பது தடுக்கப்படும். அதேநேரத்தில் எதிரிகளுக்குப் பேரிழப்பை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ள சிறிய ரக ஆளில்லா விமானங்கள்.

SCROLL FOR NEXT