உலகம்

இலங்கையை பலவீனப்படுத்தவே மனித உரிமை மீறல் புகார்கள்: வெளியுறவு அமைச்சர் பெரீஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக கொடூர செயல்களிலும் ஈடுபட்டதாக புகார்களை வைப்பது இலங்கையை பலவீனப்படுத்தவும் உள்நாட்டில் சண்டை மூட்டிவிடவுமே ஆகும் என்று வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத் தில் நடந்த அரசியல் மாநாடு ஒன்றில் பங்கேற்று பெரீஸ் பேசியதாவது:

இராக், லிபியாவில் என்ன செய்யப்பட்டதோ அதையே இலங்கையிலும் செய்ய முயற்சி நடக்கிறது. மக்களின் மனதில் இடம்பிடித்தவர் அதிபர் ராஜபக்சே. அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு, வேறு தந்திரங்களை கையாள முயற்சிக்கின்றனர்.

மனித உரிமைகள் பிரச்சி னையை கிளப்பி இலங்கைக்கு நெருக்கடி தரலாம் என்று திட்ட மிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை விடாமல் தொடர்ந்து விரட்டுகிறார்கள். இராக், லிபியாவைப் போலவே இலங்கையிலும் உள்நாட்டில் அமைதியை சீர்குலைக்க சில நாடுகள் விரும்புகின்றன.

இயற்கை வளங்களை சுரண்டுவது என்பதுதான் இராக், லிபியா விவகாரத்தில் நோக்கம். இராக்கில் அன்றாடம் குறைந்தது 25 பேராவது கொல்லப்படுகின்றனர். அதே ரத்தக்களறி இலங்கையிலும் ஏற்பட விரும்புகிறார்கள் என்றார் பெரீஸ்.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் புகார் தொடர்பாக 3-வது தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அந்த தீர்மானத்தை முறியடிப்பதற்காக, தமக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012-லிருந்து 2 தீர்மானங்கள் நிறை வேறியுள்ளன.

மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து நிலைமையை மேம்படுத்த வேண்டும். போரால் பாதிப்புக் குள்ளாகி ஒதுங்கி வாழும் தமிழர்களை சமாதானப்படுத்தி இணக்கநிலைக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

மார்ச்சில் கொண்டுவரப்படும் 3-வது தீர்மானமும் இதே அம்சங் களையே வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT