உலகம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 10 பேர் பலி

செய்திப்பிரிவு

புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்து சோமாலியா நாட்டில் கார் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர்.

சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் ஜஸீரா பேலஸ் எனும் ஹோட்டல் அருகே கார்களில் வெடிகுண்டுகளுடன் வந்த மர்ம நபர்கள் அவற்றை வெடிக்கச் செய்தனர்.

இதில், பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது குறித்து பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: இப்போதைக்கு 10 சடலங்களை கைப்பற்றியுள்ளோம், ஆனால் சேதம் பெரிய அளவில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

அல் ஷெபாப் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT