உலகம்

ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் ஓ.பி.சி.டபுள்யூ-க்கு அமைதி நோபல்

செய்திப்பிரிவு

ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் 'ரசாயன ஆயுங்கள் தடுப்பு நிறுவனம்' (ஓ.பி.சி.டபுள்யூ - OPCW) அமைப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் வழங்கப்படுகிறது.

நெதர்லாந்தில் உள்ள இந்த ஓ.பி.சி.டபுள்யூ. அமைப்பு பெறவிருப்பது, 94-வது அமைதிக்கான நோபல் பரிசு ஆகும்.

உலகில் ரசாயன ஆயுதங்களை அழிப்பதில் பெரும் பங்கு வகிப்பதற்காக, ஓ.பி.சி.டபுள்யூ-வுக்கு அமைதி நோபல் வழங்கப்படுவதாக, நார்வே நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

அமைதி நோபலுக்கான தெரிவுப்பட்டியலில் மலாலா, செல்சியா மென்னிங், டாக்டர் டெனில் முக்வேஜ் மற்றும் சகோதரி மேகி ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

'ரசாயன ஆயுங்கள் தடுப்பு நிறுவனம்', உலக நாடுகள் ரசாயன ஆயுதங்கள் நிர்வகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அரசுகளுக்கிடையிலான நிறுவனம் ஆகும்.

ரசாயன ஆயுதங்களை அழித்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததும், அது குறித்து துரிதமாக விசாரணைகள் நடத்தி, உரிய நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்பு வித்திட்டது கவனத்துக்குரியது.

இந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரலாக அகமது உஸும்கு இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT