பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் இந்து பெண்கள் மத மாற்றம் செய்யப்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்து திருமண மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோ தாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவை கடந்த 2016 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் சில திருத்தங்களுடன் மேலவை ஒப்புதல் அளித்தது. திருத்தப்பட்ட இந்து திருமண மசோதா கீழ வையில் மீண்டும் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோதா கடந்த வியா ழக்கிழமை ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. அதிபர் மெமூன் ஹுசை னின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெ ழுத்திட்டதும் இந்து திருமண சட்டம் அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.