சீனாவிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய போர்க் கப்பல் அந்நாட்டு டாலியன் நகரின் கடலில் இறக்கப்பட்டது.
சுமார் 50 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தப் போர்க் கப்பலை உருவாக்கும் பணியை 2013-ம் ஆண்டு சீனா தொடங்கியது. இந்த நிலையில் முழு கட்டுமானப் பணி முடிந்த நிலையில் புதன்கிழமையன்று இப்போர்க் கப்பலை கடலில் இறக்கி உலக நாடுகளிடையே தனது பலத்தை சீனா நிரூபித்துள்ளது.
இப்போர்க் கப்பலின் செயல்திறனை பரிசோதித்த பிறகு இப்போர்க் கப்பல் 2020- ம் ஆண்டு சீனாவின் கப்பற்படையுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் சீனாவின் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இப்போர்க் கப்பல் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் ரேண்ட் நிறுவனம் கூறும்போது, ''சீனா தனது பிராந்தியத்திலேயே சக்தி வாய்ந்த நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எண்ணுகிறது. அதற்கான ஆதாரம்தான் இந்த போர்க் கப்பல்" என்று கூறியுள்ளது.