இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் (எச்.ஆர்.டபிள்யூ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, போர்க்குற்ற விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் பரிந்துரைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இந்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பு இலங்கை போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஆசிய கண்டத்துக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியதாவது:
போர்க்குற்றங்கள் குறித்து விசா ரணை நடத்த இலங்கை அரசு தொ டர்ந்து மறுத்து வருகிறது. இதுகுறித்து விசாரித்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை சர்வதேச விசாரணைக்கு பரிந்துரைத் துள்ளார். அவரது கருத்துப்படி சர்வ தேச விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.