உலகம்

பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு?- க்ளோசர் பத்திரிகையில் செய்தி

செய்திப்பிரிவு

பிரான்ஸ் அதிபர் பிராங்காய் ஹோலாந்த்துக்கு நடிகை ஜூலி கெயட்டுடன் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது அந்நாட்டில் இருந்து வெளியாகும் க்ளோசர் வார பத்திரிகை.

அதிபருக்கு நடிகையுடன் உள்ள தொடர்பு குறித்து சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதனை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு புகைப்படங்களுடன் 7 பக்கத்துக்கு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது அப்பத்திரிகை. அதிபர் ஹோலாந்த்துக்கு வயது 59, நடிகை ஜூலி கெயட்டின் வயது 41.

பாரீஸ் நகரில் இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்று ஜூலியை ஹோலாந்த் பலமுறை சந்தித்துள்ளார்.

முக்கியமாக புத்தாண்டு பிறந்த இரவில் ஹேலாந்த் நடிகை ஜூலியை தேடிச் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றும் அப்பத்திரிகையில் வெளியாகியுள் ளது. ஆனால் அது தெளிவானதாக இல்லை.

தங்களின் செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக, அதிபர் மாளிகையில் இருந்து ஹோலாந்த் திடீரென காணாமல் போய்விடு கிறார் என்ற பாதுகாப்புத் துறையினரின் கவலையை க்ளோசர் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.

ஹோலாந்த் ஏற்கெனவே 2 முறை திரு மணமானவர் அவருக்கு 4 குழந்தைகளும் உள்ளன. 2012-ம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை கெயட்டை அவர் முதல்முதலில் சந்தித்துள்ளார். அப்போது முதலே அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள் ளது என்று அப்பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜூலி கெயட் இரு குழந்தைகளுக்கு தாய். ஏராளமான திரைப்படங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை எடுப்பேன் - ஹோலாந்த்:

நடிகையுடன் எனக்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ள க்ளோசர் பத்திரிகை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் கூறியுள்ளார்.

எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக இந்த செய்தியை நான் கருதுகிறேன். நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் உள்ளதுபோல எனக்கு அந்தரங்க வாழ்க்கைக்கான உரிமை உள்ளது என்று ஹோலாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT