உலகம்

அமெரிக்கப் பள்ளியில் பயங்கரம்: தோழியை சுட்டுக் கொன்ற மாணவன் - தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட பரிதாபம்

பிடிஐ

வாஷிங்டன் அருகே சியாட்டில் உள்ள பள்ளியொன்றில் மாணவன் தனது தோழியை சுட்டுக் கொன் றான். அவன் துப்பாக்கியால் சுட்டதில் மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இறுதியில், சம்பந்தப்பட்ட மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

வடக்கு சியாட்டிலில் உள்ள மேரில்வில்லே பில்சக் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கேன்டீனுக்குச் சென்ற மாணவன் ஜெய்லென் பிரைபெர்க் (15), அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். அங்கிருந்த மேலும் 4 பேர் மீது குண்டு பாய்ந்து படு காயமடைந்தனர். அதன் பிறகு, பிரைபெர்க், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

காயமடைந்த மாணவர்களில் 2 பேர், பிரைபெர்க்கின் உறவினர் கள் ஆவார்கள்.

சம்பவத்தை நேரில் பார்த்த மாணவன் ஜாரோன் வெம் கூறும்போது, “பிரை பெர்க் கடும் கோபத்துடன் கேன்டீனுக்கு வந்தார். அவர் காதலித்த மாணவி அமர்ந்திருந்த பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், அந்த பெண் உயிரிழந்தார். அவர் அருகே அமர்ந்திருந்தவர்கள் காய மடைந்தனர். பின்னர், பிரைபெர்க் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டை அவர் நடத்தி யிருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.

சம்பவம் தொடர்பாக போலீஸா ரும், புலனாய்வு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT