உலகம்

அணு சக்தி பேச்சுவார்த்தைக்கு வட கொரிய அரசு மறுப்பு

ஏஎஃப்பி

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத் துவதற்காக, சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா விடம் பேச்சுவார்த்தை நடத்தின. அப்பேச்சுவார்த்தை இடையில் நின்றுபோனது.

அதன்பிறகு, வடகொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

வடகொரியாவுக்கு ராஜ்ஜிய மற்றும் பொருளாதார ரீதியில் சீனா உற்ற நண்பனாக இருந்து வருகிறது. எனவே, மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்க சீனா முனைப்புக் காட்டியது.

ஆனால், வடகொரிய அமைச் சரவையின், வட அமெரிக்க விவகா ரங்களுக்கான துணை தலைவர் சோ சன் ஹுய் கூறும்போது, “அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு அமைப்பு கூட்டத்தில் சோ சன் ஹூய் பங்கேற்றுள்ளார். இதில் மற்ற 5 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்காவின் வெறுப்பு அரசியல் தொடர்கிறது. கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியா தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT