துரோக வழக்கில் ஆஜராவ தற்காக நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். உடனடியாக அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக முஷாரபின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரஸா புஹாரி நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ மருத்துவமனையில் முஷாரபுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற் போது அவர் சுயநினைவுடன் உள்ளார் என்றார். முஷாரப் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட தகவலை போலீஸ் டி.ஐ.ஜி. முகமது சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி ஏற்கெனவே 2 முறை நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை. ஜனவரி 2-ம் தேதி அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் முஷாரப் சேர்ந்துள் ளார்.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அகமது ரஸா கசூரியிடம், நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரப் பயப்படுகிறாரா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் ஒரு கமாண்டோ, எதற்கும் அஞ்சமாட்டார் என்றார் கசூரி. முஷாரப் வீட்டில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் 2 முறை வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதை காரணம் காட்டி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்தமுறை முஷாரபின் பாதுகாப்புக்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வழிநெடுகிலும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. செல்போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட் டிருந்த முஷாரப் ஜாமீன் பெற்று அண்மை யில்தான் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். தேசத் துரோக வழக்கில் அவர் சிறை வைக்கப்படலாம் என்று கூறப்படுவதால் நீதிமன்றத்தில் ஆஜரா காமல் முஷாரப் தவிர்த்து வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.