உலகம்

எல் சால்வடாரில் நிலநடுக்கம்

ஐஏஎன்எஸ்

எல் சால்வடார், நிகரகுவா ஆகிய நாடுகளின் பசிபிக் கடற்பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்பகுதியில் தரையில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஆபத்து இருப்பதால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எல் சால்வடார் அரசு கேட்டுக்கொண்டது.

SCROLL FOR NEXT