சீனாவின் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறைய பேர் சிக்கிக் கொண்டாதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சினுவா செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியில், "சீனாவில் நங்சங் நகரிலுள்ள எச்என்ஏ பிளாட்டினம் ஓட்டலில் இரண்டாவது தளத்தில் இன்று (சனிக்கிழமை) தீடீரென தீ பற்றிக் கொண்டது.
தீப்பற்றி கொண்ட தளத்தில் நிறைய பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். 2வது தளத்தின் ஜன்னலிருந்து குதித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தில் சிக்கிக் கொண்டர்வர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
10-க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள தளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக அங்கிருந்து தப்பிவந்த பெண் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
தீ விபத்தினால் ஏற்பட்ட தேச விவரங்கள் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.