இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட் டுள்ளது. மொத்தமுள்ள 38 மாகாண உறுப்பினர்களில் 22 பேர் கையெழுத்திட்ட தீர்மானம், ஆளுநர் ரெஜினால்டு கூரே-விடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக சி.வி விக்னேஷ்வரன் பொறுப்பேற்றார்.
மூத்த நீதிபதியான இவரது தலைமையின் கீழ் 4 பேர் அமைச்சரவையில் இடம்பிடித்த னர். இவர்களில் வேளாண் துறை அமைச்சரான பி ஐங்கரனேஷன், கல்வி அமைச்சர் டி குருகுலராஜா ஆகியோர் மீது ஊழல் புகார் எழுந்தது.
இதுபற்றி விசாரணை நடத்த கடந்த ஆண்டு முதல்வரால் அமைக்கப்பட்ட குழு, அறிக் கையை கடந்த வாரம் சமர்ப் பித்தது. அந்த அறி்க்கையில் அமைச்சர்கள் இருவரும் ஊழல் செய்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, முதல்வர் சி.வி விக்னேஷ்வரனுக்கு எதிராக மொத்தமுள்ள 38 மாகாண உறுப்பினர்களில் 22 பேர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் நகல், ஆளுநர் ரெஜினால்டு கூரே-விடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி விக்னேஷ்வரனுக்கு ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் தற்போது அவைத் தலைவராக உள்ள சி.வி.கே. சிவஞானம் அடுத்த முதல்வராக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.