உலகம்

இரான் அதிபர் தேர்தல்: ஹசன் ரூஹானி முன்னிலை

ஏஎஃப்பி

இரான் அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது அதிபராகவுள்ள ஹசன் ரூஹானி முன்னிலையில் உள்ளார்.

இதுகுறித்து இரான் உள்துறை துணை அமைச்சர் அலி அஸ்கர் அகமதி செய்தியாளர்கள் சந்திப்பில் சனிக்கிழமை கூறும்போது, " இரானில் நேற்று (வெள்ளிகிழமை) நடத்தப்பட்டஅதிபர் தேர்தலில் கிட்டதட்ட 4 கோடி ஈரான் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு 70% பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் இரான்அதிபர் ஹசன் ரூஹானி 14.6 மில்லியன் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள இப்ராகிம் ரைசி 10.1 மில்லியன் வாக்குகள் பெற்றிருக்கிறார். தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது" என்றார்.

இந்த அதிபர் தேர்தலில் ஹசன் ரூஹானி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்வார் என இரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் இரான் இடையே அணு ஆயுதத் தடை தொடர்பான ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு நடைபெற்ற பிறகு, ஈரானில் நடக்கும் அதிபர் தேர்தல் என்பதால் இத்தேர்தல் உலக நாடுகளிடையே மிகுந்த முக்கியதுவம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT