உலகம்

இந்தியர்களைத் தாக்கும் கே.ஒய்.ஆர். கும்பல்: நீதிமன்ற விசாரணையில் அம்பலம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களையும், அவர்களைப் போன்று தோற்றமளிப் பவர்களையும் தாக்கும் செயலில் ‘கே.ஒய்.ஆர்.’ என்ற பெயரிலான கும்பல் செயல்படுவது இப்போது அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் மன்ராஜ்வீந்தர் சிங் என்ற இந்தியர், மெல்போர்னின் பிரின்சஸ் பிரிட்ஜ் அருகே பிர்ராரங் மார் பகுதியில் ரயிலுக்காக காத்திருந்தபோது ஆப்பிரிக் கர்களைப் போன்று தோற்றமளித்த கும்பலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, குழந்தைகள் நீதி மன்றத்தில் வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது.

அப்போது, சம்பந்தப்பட்ட சிறுவன் ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர் என்றும், அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளதும் தெரியவந்தது.

இதை காரணம் காட்டிய விக்டோரியா பகுதி போலீஸார் தற்போதைய வழக்கில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த சிறுவனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

முன்னதாக விக்டோரியா போலீஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் கூறுகையில், “இந்த தாக்குதலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரும் கே.ஒய்.ஆர் (கில் யுவர் ரைவல்ஸ்) என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு இந்தியர் களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது” என்றார்.

தொடர்ந்து கவலைக்கிடம்

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள மன்ராஜ்வீந்தர் சிங், இன்னும் கோமா நிலையில் இருந்து மீளவில்லை. இது குறித்து அவரின் சகோதரர் யாத்வீந்தர் சிங் கூறுகையில், “எனது சகோதரர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளார்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மன்ராஜ்வீந்தருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கண்காணிக்கின்றனர். அவரின் பெற்றோர், ஆஸ்திரேலியா வருவதற்கு விசா பெறும் நடவடிக்கையில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT