உலகம்

சொந்த பணிகளுக்காக ரோபோ உருவாக்கும் ஃபேஸ்புக் மார்க்

ராய்ட்டர்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது தனிப்பட்ட மற்றும் அலுவலக உதவிக்காக எளிமையான ரோபோவை தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள மார்க் ஸக்கர்பெர்க், "இந்த ஆண்டு என் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், எனக்கான ஓர் எளிமையான ரொபோவை தயாரிப்பதுதான். அயன் மேன் படத்தில் வரும் ஜார்சிஸ் என்ற பட்லர் ரோபோவைப் போல அமைய வேண்டும்.

எனது தேவைக்காக நான் உருவாக்கப் போகும் இந்த ரோபோ மிகவும் வேடிக்கையாகவும் சவாலாகவும் இருக்கப் போகிறது. உதாரணமாக, எனது நண்பர்களின் முகங்களை அதற்கு சொல்லிக் கொடுத்து, வீட்டில் அழைப்பு மணி அடித்தால் அவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் முடிவில், ஸக்கர்பெர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில், தனது 99 சதவீத பங்குகளை விற்று செய்திகளில் தவறாது இடம்பிடித்தார்.

வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடே மார்க் தனது பங்குகளை விற்பனை செய்வதாக பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT