வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்த போது 2 இளம் பெண்கள் ரசாயன திரவத்தைத் தெளித்து அவரை கொலை செய்தனர்.
இதுதொடர்பாக அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசா ரணையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தர வின்பேரில் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் வட கொரிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த கிம் உக்-இல் (37) என்ப வருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மலேசிய போலீஸார் கைது வாரன்ட் பிறப் பித்துள்ளனர். வடகொரியாவில் பதுங்கியுள்ள அவரை ஒப்படைக் கும்படி அந்த நாட்டு அரசிடம் முறைப்படி நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.
நாடு கடத்தல்
கொலை வழக்கு தொடர்பாக வடகொரியாவைச் சேர்ந்த ரி ஜாங் சோல் (47) என்பவரை மலேசிய போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். ஆனால் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை போலீஸாரால் திரட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் நேற்று மலேசியாவில் இருந்து வடகொரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.